தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 81.35 கோடி ஏழை எளிய மக்களுக்கு ஓராண்டுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஏற்கனவே இந்த தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாதம் தோறும் நபர் ஒருவருக்கு அரிசி கிலோ 3 ரூபாய்க்கும், கோதுமை கிலோ 2 ரூபாய்க்கும், 5 கிலோ உணவு தானியங்கள் போன்றவை வழங்கப்படுகின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் ஏழைகளுக்கான இலவச ரேஷன் திட்டத்தை டிச., 31ம் தேதியுடன் நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
அதே நேரம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 81.35 கோடி ஏழை எளிய மக்களுக்கு ஓராண்டுக்கு இலவச ரேஷன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் என மத்திய உணவுத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் ௯றினார்.














