முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடியது
இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் கூடியது. முதலமைச்சர் 28ஆம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் கூடுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் புதிய தொழில்களை தொடங்குவதற்கான அனுமதி, முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் உரையாற்ற அழைக்கபடுவாரா? சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்த ஆலோசனைகள் இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.














