தமிழக கடற்கரை பகுதிகளில் புயல் எச்சரிக்கைகள் காரணமாக 7 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வறண்ட காற்றின் ஊடுருவலால் சற்று தளர்ந்து, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை சென்றடையும். இதனால், 25 மற்றும் 26-ந்தேதிகளில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 26 மற்றும் 27-ந்தேதிகளில் மிதமான முதல் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 7 துறைமுகங்களில் 3-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர்,நாகை, எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.