அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சாதியை அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு பார்க்கும் முறை தடை செய்யப்படுகிறது. அதன்படி, சாதிப்பாகுபாட்டை தடை செய்யும் முதல் அமெரிக்க மாகாணமாக கலிபோர்னியா மாறுகிறது.
கலிபோர்னியா மாகாணத்தின் செனட் சபையில் இதற்கான வாக்கெடுப்பு நேற்று நடந்தது. இதில் 31 உறுப்பினர்கள் சாதி பாகு பாட்டு தடைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். அதன்படி, இந்த மசோதாவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அமெரிக்க சபையின் முதல் இஸ்லாமிய மற்றும் ஆப்கானிஸ்தான் பெண்ணான ஆயிஷா வாஹாப், இந்த மசோதா சமூகத்தில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வரும் என தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து தரப்பு மக்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன், மசோதா கவின் நியூசாம் தலைமையிலான ஜனநாயக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.