கலிபோர்னியாவில் சாதி பாகுபாட்டை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்

May 13, 2023

கலிபோர்னியாவில் சாதி பாகுபாட்டை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சாதி அடிப்படையில் பாகுபாட்டை தடை செய்யும் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலத்தின் செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 34 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநில பிரதிநிதிகள் சபையில் மசோதா அறிமுகம் செய்யப்படும். அங்கு நிறைவேற்றப்பட்டதும் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அமெரிக்காவில் இதுபோன்ற சட்ட மசோதாவை […]

கலிபோர்னியாவில் சாதி பாகுபாட்டை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சாதி அடிப்படையில் பாகுபாட்டை தடை செய்யும் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. மாநிலத்தின் செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 34 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநில பிரதிநிதிகள் சபையில் மசோதா அறிமுகம் செய்யப்படும். அங்கு நிறைவேற்றப்பட்டதும் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அமெரிக்காவில் இதுபோன்ற சட்ட மசோதாவை நிறைவேற்றும் முதல் மாநிலம் கலிபோர்னியா ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu