கேலோ இந்திய இளைஞர் விளையாட்டு போட்டி - தமிழக அணிக்கான தேர்வு தேதி அறிவிப்பு

November 27, 2023

சென்னையில் நவம்பர் 30-ம் தேதி கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிக்காக தமிழக அணியில் இடம்பெறுவதற்கு வீரர் வீராங்கனைகளுக்கு தகுதி தேர்வு நடைபெற உள்ளது. மத்திய அரசின் சார்பில் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்பகுதியை மேம்படுத்துவதற்காக இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான கேலோ போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி […]

சென்னையில் நவம்பர் 30-ம் தேதி கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிக்காக தமிழக அணியில் இடம்பெறுவதற்கு வீரர் வீராங்கனைகளுக்கு தகுதி தேர்வு நடைபெற உள்ளது.

மத்திய அரசின் சார்பில் கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இளைஞர்களிடையே விளையாட்டு மற்றும் உடற்பகுதியை மேம்படுத்துவதற்காக இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான கேலோ போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதனை அடுத்த தமிழக அணியில் இடம்பெறுவதற்காக சென்னையில் நவம்பர் 30, டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளிலும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பெண்களுக்கான கூடை பந்து அணிக்கு டிசம்பர் 1ஆம் தேதியும், ஆண்கள் அணிக்கு டிசம்பர் 2ம் தேதியும், பெண்கள் கால்பந்து அணிகு நவம்பர் 30ம் தேதி, ஆண்கள் அணிக்கு டிசம்பர் 1ஆம் தேதியும் காலை 7 மணி அளவில் தேர்வு நடத்தப்பட உள்ளன. அதேப்போல் நேரு பூங்கா, மாவட்ட விளையாட்டு வளாகத்தில் பெண்களுக்கான கபடி மற்றும் கோ - கோ அணிக்கு நவம்பர் 30ஆம் தேதியும், ஆண்கள் அணிக்கு டிசம்பர் 1ம் தேதியும், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் பெண்களுக்கான வாலிபால் மற்றும் ஹாக்கி அணிக்கு நவம்பர் 30-ஆம் தேதி, ஆண்களின் டிசம்பர் 1ஆம் தேதியும் காலை 7 மணிக்கு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தகுந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu