பாராளுமன்ற தேர்தல் ஆறாம் கட்ட வாக்குபதிவு களுக்கான பிரச்சாரம் நிறைவடைந்துள்ளது.
நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெற்றிகரமாக ஐந்து கட்ட வாக்கு பதிவுகள் நிறைவு பெற்றுள்ளது. அதன்படி ஆறாம் கட்டமாக நாளை மறுதினமும் ஏழாவது கட்டமாக ஜூன் ஒன்றாம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 58 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. அதன்படி 6ஆம் கட்ட வாக்குப்பதிவுகளுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6:00 மணியுடன் நிறைவடைந்தது