அமெரிக்க ஹெச் 1 பி விசாதாரர்கள் கனடாவில் பணிபுரியலாம் - புதிய அறிவிப்பு

July 19, 2023

கனடா நாட்டில், ஓபன் ஒர்க் பெர்மிட் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவில் உள்ள ஹெச் 1 பி விசாதாரர்கள் கனடாவில் பணிபுரிய முடியும். அத்துடன், ஹெச் 1 பி விசாதாரர்கள் கல்வி பயிலும் வாய்ப்பும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் முதல் முறையாகக் கொண்டுவரப்பட்டுள்ள ‘டெக் டேலண்ட் ஸ்ட்ராட்டஜி’ திட்டத்தின் கீழ், இந்த ஓபன் வொர்க் பர்மிட் வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு, ஹெச் 1 பி விசாதாரர்களுக்கு கனடாவில் ஓபன் வொர்க் பர்மிட் வழங்கப்படும் என அந்நாட்டின் […]

கனடா நாட்டில், ஓபன் ஒர்க் பெர்மிட் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவில் உள்ள ஹெச் 1 பி விசாதாரர்கள் கனடாவில் பணிபுரிய முடியும். அத்துடன், ஹெச் 1 பி விசாதாரர்கள் கல்வி பயிலும் வாய்ப்பும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் முதல் முறையாகக் கொண்டுவரப்பட்டுள்ள ‘டெக் டேலண்ட் ஸ்ட்ராட்டஜி’ திட்டத்தின் கீழ், இந்த ஓபன் வொர்க் பர்மிட் வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு, ஹெச் 1 பி விசாதாரர்களுக்கு கனடாவில் ஓபன் வொர்க் பர்மிட் வழங்கப்படும் என அந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் பிராசர் தெரிவித்துள்ளார். மேலும், விசாதாரர்களின் வாழ்க்கை துணை மற்றும் அவரை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கனடாவில் தங்குவதற்கான தற்காலிக விசா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன், அவர்களுக்கும் பணி அல்லது கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், குடியேற்றத்திற்கு 10000 விண்ணப்பங்கள் வரும் வரை அல்லது ஓராண்டுக்கு, இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம், கனடாவின் வர்த்தக மற்றும் பொருளாதார நிலையில் கணிசமான முன்னேற்றம் பதிவாகும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu