கனடாவின் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்ட், தனது பதவியையும் நிதி மந்திரி பதவியையும் ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கான விளக்கமாக, அவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எழுதிய கடிதத்தில், கனடா தற்போது பெரிய சவாலை எதிர்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் பிரதமருக்கும் கனடாவின் எதிர்காலம் குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும், அதனால் மந்திரிசபையில் இருந்து விலகுவது மட்டுமே சரியான வழி என தீர்மானித்ததாக தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் பிரீலேண்ட் கூறியுள்ளார். இதற்கிடையில், கனடா வீட்டு வசதி துறை மந்திரி சீயன் பிரேசர் நேற்று ராஜினாமா செய்தார்.