கனடா நாட்டிற்கு வருகை விசா மூலம் சென்றவர்கள், அங்கிருந்து கொண்டே வேலை செய்வதற்கான வொர்க் பெர்மிட் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது நடைமுறையில் உள்ள வழக்கமாகும். தற்போது, இதனை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், கடந்த ஆண்டில் வொர்க் பெர்மிட் பெற்றவர்கள், வேலைக்கான அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம், பிப்ரவரி 28ஆம் தேதி உடன் நிறைவடைவதாக இருந்தது. இந்நிலையில், இது மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை துறை தெரிவித்துள்ளது. மேலும், வருகை விசாவில் கனடா சென்றவர்கள், வொர்க் பெர்மிட்களை பெற வேண்டியதற்கான தகுதிப் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு மூலம், புலம்பெயர் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.