கனடாவின் டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில், டெல்டா ஏர்லைன்ஸ் 4819 விமானம் தரையிறங்கும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 80 பேரும் உயிருடன் தப்பினர். 18 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், ஒரு குழந்தை மற்றும் இருவர் தீவிர காயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்த உடனே விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், விசாரணைக்காக இரண்டு ஓடுபாதைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. வானிலை மாற்றமா, வேறொரு காரணமா என்பது குறித்து கனடா போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு விசாரணை நடத்துகிறது.














