நிரந்தர குடியுரிமைக்கான கட்டணத்தை உயர்த்துவதாக கனடா அறிவிப்பு

April 4, 2024

வரும் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான கனவு அதிக தொகை கொண்டதாக மாறுகிறது. கனடா நாட்டு குடியேற்றத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்கள் 12% உயர்த்தப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, 515 கனடா டாலர்களாக உள்ள கட்டணம் ஏப்ரல் 30 முதல் 575 டாலர்களாக உயர்த்தப்படுகிறது. மேலும், அவர்களுடன் தங்கியிருப்பவர்கள் மற்றும் வாழ்க்கை துணைக்கு 570 டாலர்களில் இருந்து 635 டாலர்களாக கட்டணம் உயர்த்தப்படுகிறது. அத்துடன், […]

வரும் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான கனவு அதிக தொகை கொண்டதாக மாறுகிறது.

கனடா நாட்டு குடியேற்றத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான கட்டணங்கள் 12% உயர்த்தப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, 515 கனடா டாலர்களாக உள்ள கட்டணம் ஏப்ரல் 30 முதல் 575 டாலர்களாக உயர்த்தப்படுகிறது. மேலும், அவர்களுடன் தங்கியிருப்பவர்கள் மற்றும் வாழ்க்கை துணைக்கு 570 டாலர்களில் இருந்து 635 டாலர்களாக கட்டணம் உயர்த்தப்படுகிறது. அத்துடன், அவர்களது குழந்தைகளுக்கான கட்டணம் 155 டாலர்களில் இருந்து 175 டாலர்களாக உயர்த்தப்படுகிறது. இது கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற விரும்புவோருக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu