இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நீடிக்கும் சூழலில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கான முடிவை கனடா மற்றும் மால்டா அறிவித்துள்ளன. இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னி, மத்திய கிழக்கில் சுதந்திரமான, பாதுகாப்பான பாலஸ்தீன் நாட்டை உருவாக்குவது நீண்ட கால இலக்காகும் எனவும், வரவிருக்கும் செப்டம்பர் 23ஆம் தேதி ஐ.நா பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். 2026ல் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதில் ஹமாஸ் பங்கேற்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மால்டா அரசும் பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து, செப்டம்பர் மாதத்தில் ஐ.நா கூட்டத்தில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க தீர்மானித்துள்ளது. இந்த முடிவுகளுக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.