கனடா நாட்டில், காலிஸ்தன் இயக்க தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்தியா மற்றும் கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இரு நாடுகளின் தூதரக உறவு பாதிப்படைந்துள்ளது. இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு இந்தியா தெரிவித்திருந்தது. அதன்படி, தூதரக அதிகாரிகளை சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கு கனடா மாற்றி வருகிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கனடா நாட்டு தூதரக அதிகாரிகள் கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூர் தூதரகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.