கனடா அரசு, தனது குடியேற்றங்களை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்குள், புதிதாக 5 லட்சம் பேரை குடியேற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளதாவது: “கனடா, 2023 ஆம் ஆண்டில் 465000 பேரை குடியேற்ற திட்டமிட்டு இருந்தது. இது 2025 ஆம் ஆண்டில் 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் சுகாதாரச் சிக்கல், வீட்டு வசதி மற்றும் வேலை வாய்ப்பின்மை ஆகியவற்றை களையும் விதமாக இந்த குடியேற்றங்கள் செய்யப்படுகின்றன. குடியேற்றங்கள் அதிகமாவதால், கனடாவில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திட்டங்கள் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படும். அதாவது, கனடாவின் வளர்ச்சி திட்டங்களில் பணியாற்றுவதற்கான ஊழியர்கள் குடியேற்றப்படுவர்” என்று கூறியுள்ளார். கனடாவில் புதிதாக குடியேறுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக வெளியான தகவலை அடுத்து, கனடா அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.