கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு 25% மற்றும் சீனாவிற்கு 10% வரி விதித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தை விலக்குதல், மெக்சிகோ எல்லையில் அவசரநிலை பிரகடனம் ஆகியவை இதில் அடங்கும். மேலும், கனடா, மெக்சிகோ, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக, கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு 25% மற்றும் சீனாவிற்கு 10% வரி விதித்துள்ளார். இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பதிலடியாக, கனடா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதித்ததாக அறிவித்துள்ளது. இது இன்று முதல் நடைமுறையில் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.