ரஷ்யா எரிசக்தி மற்றும் உணவை ஆயுதமாக பயன்படுத்துகிறது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஐநா சபையில் தெரிவித்துள்ளார்.ஐநா சபையின் வருடாந்திர பொதுக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கோடிக்கணக்கான மக்கள் உணவு தட்டுப்பாட்டால் அவதிப்படுகின்றனர். உலகில் பசி பசி பட்டினியால் மக்கள் வாடுகின்றனர்.
இப்படி பாதிப்படைந்த மக்களுக்கு பணியாற்றுவதில் கனடா அர்ப்பணிப்புடன் உள்ளது. ரஷ்யா எரிசக்தி மற்றும் உணவை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. அந்த நாடு உக்ரைனில் இருந்து முற்றிலுமாக தனது துருப்புகளை திரும்ப பெற வேண்டும் என்றார்.