காலிஸ்தான் தலைவர் நிஜ்ஜார் கொலையில் 3 இந்தியர்கள் கைது

May 4, 2024

காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜார் கொலையில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவரான ஹர்திக் சிங் நிஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். எனினும், இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்த விவகாரம் காரணமாக இரு நாடுகளிடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே, நிஜார் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு […]

காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜார் கொலையில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவரான ஹர்திக் சிங் நிஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். எனினும், இந்தியா இதனை திட்டவட்டமாக மறுத்தது. இந்த விவகாரம் காரணமாக இரு நாடுகளிடையே உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே, நிஜார் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்துவதாக கனடா அரசு தெரிவித்தது. இந்நிலையில், நிஜார் கொலை வழக்கில் இந்தியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் கரண் ப்ரீத் சிங், கரண் பரார், கமல் பிரீத் சிங் ஆகியோர் ஆவர். இது குறித்து காவல்துறை அதிகாரி டேவிட் கூறுகையில், நிஜார் கொலை வழக்கில் இந்த மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையில் இந்திய அரசாங்கத்தின் தொடர்புகள் குறித்து தனி விசாரணை நடந்து வருகிறது. இந்த இந்த நபர்களுடனான இந்திய அரசாங்கத்தின் தொடர்புகள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu