கனரா ஃபேக்டர்ஸ் லிமிட்டெட் என்பது கனரா வங்கியின் துணை நிறுவனம் ஆகும். கனரா வங்கி பொதுத்துறை வங்கி என்பதால், தனது துணை நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்க வேண்டும். அதன்படி, தற்போது இதற்கான ஒப்புதலை ஆர்பிஐ வழங்கியுள்ளது.
கனரா வங்கியிடம், கனரா ஃபேக்டர்ஸ் நிறுவனத்தின் 70% பங்குகள் உள்ளன. இவற்றை முழுமையாக விற்பதற்கு கனரா வங்கி திட்டமிட்டிருந்தது. இதற்கான ஒப்புதலை தற்போது மத்திய ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது. அதே வேளையில், கனரா வங்கியின் மற்றொரு துணை நிறுவனமான கன்பேங்க் கம்ப்யூட்டர் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளையும் விற்பனை செய்ய கனரா வங்கி திட்டமிட்டு வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.