நிர்வாக சீரமைப்பு திட்டம் ரத்து: பள்ளி கல்வி துறை முடிவு

கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக சீரமைப்பை ரத்து செய்ய தமிழக பள்ளிக் கல்வி துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் கீழ், 67 மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்டத்துக்கு ஒரு முதன்மை கல்வி அலுவலகம் இருந்தன. அதே போல், தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ், 32 மாவட்ட கல்வி அலுவலகங்களும், 17 மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களும் தனியாக செயல்பட்டன. நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த அலுவலகங்களுக்கு பதிலாக ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. […]

கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக சீரமைப்பை ரத்து செய்ய தமிழக பள்ளிக் கல்வி துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் கீழ், 67 மாவட்ட கல்வி அலுவலகங்கள், மாவட்டத்துக்கு ஒரு முதன்மை கல்வி அலுவலகம் இருந்தன. அதே போல், தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ், 32 மாவட்ட கல்வி அலுவலகங்களும், 17 மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகங்களும் தனியாக செயல்பட்டன.

நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த அலுவலகங்களுக்கு பதிலாக ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. 67 ஆக இருந்த மாவட்ட கல்வி அலுவலகங்கள், 128 ஆக அதிகரிக்கப்பட்டன. முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

தொடக்க கல்வி இயக்குனரகத்தை, பள்ளிக் கல்வி இயக்குனரகத்துடன் இணைப்பது மற்றும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., போன்ற அனைத்து வகை தனியார் பள்ளிகளையும் சுயநிதி பள்ளிகள் இயக்குனரகத்துடன் இணைப்பது போன்ற நிர்வாக சீரமைப்பு அ.தி.மு.க. ஆட்சியில் அமல்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

தற்போது இந்த அரசாணை ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வி துறை முடிவெடுத்துள்ளது. மேலும் பழைய நிர்வாக சீரமைப்பு நடவடிக்கையை கொண்டு வர நிதித் துறை அனுமதி அளிக்குமாறு பள்ளிக் கல்வி துறை கடிதம் அளித்துள்ளது. இதுகுறித்து, இரு துறை அமைச்சர்களும் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu