பால் பொருட்களை வாங்காத பாலகங்களின் அனுமதியை ரத்து செய்ய 'ஆவின்' நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமின்றி 200க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இவை, ஆவின் பாலகங்களில் மட்டுமின்றி தனியார் சூப்பர் மார்க்கெட்களிலும் விற்கப்படுகிறது. பாலகங்களை நடத்தும் பலர் பால் பொருட்களை கொள்முதல் செய்வது கிடையாது. பாலகம் என்ற பெயரில் டீக்கடைகளையும், மளிகை கடைகளையும் சிலர் நடத்தி வருகின்றனர்.
எனவே, பால் பொருட்களை வாங்காத பாலகங்களின் அனுமதியை ரத்து செய்ய ஆவின் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக வாரந்தோறும் ஒவ்வொரு பாலகத்திலும் 10 ஆயிரம் ரூபாய்க்கு ஆவின் பால் பொருட்களை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை பின்பற்றாத பாலகங்களின் அனுமதி ரத்து செய்யப்பட உள்ளது.