கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் பிடே கேண்டிட்டேட் செஸ் போட்டி கடந்த நான்காம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
கனடாவில் டொரன்டோ நகரில் கேண்டிடேட் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் தலா எட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றத்தில் இந்தியா சார்பில் ஐந்து பேர் கலந்து கொண்டனர். 14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரில் 14வது மற்றும் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது. அதில் சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் இந்த தொடரில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் கடைசி சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த விகாரூ நகம்ராவை ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டார். இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடி 71 ஆவது காய் நகர்த்தலுக்கு பின்னர் டிராவில் முடிந்தது. இதனால் குகேஷ் ஒன்பது புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதில் 14 சுற்றுகளில் குகேஷ் 5 வெற்றி, 8 ஆட்டங்களில் டிரா செய்தார். ஒரே ஒரு சுற்றில் மட்டும் தோல்வியை தழுவினார். மேலும் கேண்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார்.