பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கேப்ஜெமினி, ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான நிதி ஆண்டு முறையை பின்பற்றி வருகிறது. அந்த வகையில், தனது முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் வருவாய் 10.7% உயர்ந்து, 5.7 பில்லியன் ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரிசை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கேப்ஜெமினியின் 50% பணியாளர்கள் இந்தியாவில் உள்ளனர். மேலும், சர்வதேச அளவில், கடந்த ஆண்டில் 5% பணியாளர்கள் புதிதாக அமர்த்தப்பட்டு உள்ளனர். இதன் மூலம், நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 357000 ஆக உயர்ந்துள்ளது. எனினும், கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் 2000 பேர் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்திலிருந்து வெளியேறும் ஊழியர்களின் எண்ணிக்கை, அதாவது அட்ரீசன் விகிதம், 26.2% ல் இருந்து 22.9% ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














