சிரியாவில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகினர். சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் நேற்று மதியம் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. விவசாய தொழிலாளர்களை ஏற்றிய வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அருகில் நின்றிருந்த வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் திடீரென வெடித்தது. இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், சிகிச்சை பெற்றுவந்த மேலும் 5 […]

சிரியாவில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 20 பேர் பலியாகினர்.

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் நேற்று மதியம் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. விவசாய தொழிலாளர்களை ஏற்றிய வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அருகில் நின்றிருந்த வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் திடீரென வெடித்தது. இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், சிகிச்சை பெற்றுவந்த மேலும் 5 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த பயங்கர தாக்குதல் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu