22-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி குறைப்பு அமல்; விலை குறைப்பு விவரங்களை சுவரொட்டியில் வெளியிட உத்தரவு.
ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களின் அடிப்படையில் பல்வேறு பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் அடங்கும். புதிய வரி விகிதங்கள் வருகிற செப்டம்பர் 22-ந்தேதி முதல் அமலுக்கு வருகின்றன.இதனால் கார் மற்றும் டூ வீலர் விலைகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மக்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில், தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் விற்பனை மையங்களில் விலை குறைப்பு விவரங்களை சுவரொட்டியாக ஒட்டி வெளிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த சுவரொட்டிகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் வரி குறைப்பின் நன்மை மக்களுக்கு தெளிவாக கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.