டாடா, கியா, ரெனால்ட், ஆடி, பென்ஸ், மாருதி உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் வரும் ஜனவரி மாதம் முதல் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இதனால், இந்தியச் சந்தையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட உள்ளன.
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி, பயணிகள் வாகனங்களின் விலையை உயர்த்துகிறது. ஆடி, தனது அனைத்து மாடல் கார்களிலும் 1.7% விலை உயர்வை அறிவித்துள்ளது. மெர்சிடஸ் பென்ஸ், தனது அனைத்து மாடல் கார்களின் எக்ஸ் ஷோரூம் விலைகளில் 5% வரை விலை உயர்வை அறிவித்துள்ளது. ரெனால்ட் மற்றும் கியா நிறுவனங்களும், தனது பயணிகள் வாகனங்கள் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் கடுமையான கார்பன் வெளியேற்ற சட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளதால், டாடா நிறுவனத்தின் கார்கள் விலை உயர்த்தப்படுவதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.














