அண்மையில் நடைபெற்ற தமிழக அரசின் கூட்டத்தில், புதிய வாகனங்களுக்கான வரி விகிதங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் விலை உயரக்கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழக அரசு அறிவித்துள்ள வரி உயர்வு, அனைத்து தரப்பு வாகனங்களையும் பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது. குறிப்பாக, ஷேர் ஆட்டோக்கள், டாக்சிகள், கனரக வாகனங்கள் ஆகியவற்றின் விலைகளும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மாற்றத்தின் படி, ஒரு லட்சத்துக்கும் கூடுதலான விலையுள்ள இருசக்கர வாகனங்களுக்கான வரி 8% ல் இருந்து 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே வேளையில், 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான கார்களின் விலையில் 18% வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 லட்சத்திற்கும் அதிகமான விலையுள்ள கார்களுக்கு 20% வரி விதிக்கப்படுகிறது.