வார்னர் பிரதர்ஸ், கார்ட்டூன் நெட்வொர்க் இணையதளத்தை மூடி, பயனர்களை அதன் புதிய சந்தா சேவையான Max க்கு மாற்றியுள்ளது. அனிமேஷன் ரசிகர்களுக்கு பல உள்ளடக்கங்களை இலவசமாக வழங்கி வந்த இந்த வலைப்பக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே சமயத்தில், சமூக ஊடகங்களில் அதிக கவனம் செலுத்தி, ரசிகர்களுடன் நேரடியாக இணைய வார்னர் பிரதர்ஸ் திட்டமிட்டுள்ளனர்.
தொலைக்காட்சித் துறையில் சந்தா சேவைகள் பிரபலமாகி வருவதால், வார்னர் பிரதர்ஸ், தனது உள்ளடக்கத்தை மையப்படுத்தி ஒரு சந்தா சேவையை உருவாக்கி உள்ளனர். அதன்படி வெளியாகியுள்ள Max சேவை, குழந்தைகளுக்கான கூடுதல் தனிப்பயனாக்கப்பட்ட அம்சங்களை வழங்குகிறது. இது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திரை நேரத்தை கண்காணிக்க உதவும். கார்ட்டூன் நெட்வொர்க் உள்ளடக்கங்களை பார்க்க, பயனர்கள் இனி Max சேவைக்கான சந்தா கட்டணத்தை செலுத்த வேண்டும். கார்ட்டூன் நெட்வொர்க் இணையதளத்தில் கிடைக்காத பல கூடுதல் அம்சங்கள் Max சேவையில் கிடைக்கும்.














