மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் காஸ்பர் ரூட் சாம்பியன் பட்டம்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் காஸ்பர் ரூட் சாம்பியன் பட்டம் வென்றார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், பிரிட்டன் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.இதில் முதல் செட்டை 7-5 என காஸ்பர் ரூட் கைப்பற்றினார். பதிலுக்கு டிராபர் 2வது செட்டை 6-3 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 […]

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் காஸ்பர் ரூட் சாம்பியன் பட்டம் வென்றார்.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், பிரிட்டன் வீரர் ஜாக் டிராபர் உடன் மோதினார்.இதில் முதல் செட்டை 7-5 என காஸ்பர் ரூட் கைப்பற்றினார். பதிலுக்கு டிராபர் 2வது செட்டை 6-3 என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என காஸ்பர் ரூட் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu