தெலுங்கானாவில் நாளை முதல் நவம்பர் 30 வரை சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்பட உள்ளது.
காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மாநிலத்திற்குப் பிறகு, தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30-ம் தேதி வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில், மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதில் 48 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் 85 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதன்படி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று தரவுகளை சேகரிப்பார்கள். மேலும், இந்தக் கணக்கெடுப்பு மூலம், சமூக இடஒதுக்கீட்டை உறுதி செய்யவும், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு நலன் பெறச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.