மொத்த எம்.பி.க்களில் பெரும்பாலோர் வாக்களிப்பு முடித்தனர்; வெற்றி பெற NDA வேட்பாளர் வாய்ப்பு அதிகம். தில்லியில் நடைபெற்ற குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. காலை 10 மணி முதல் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர். மொத்தம் 782 வாக்குகள் பதிவு செய்ய வேண்டிய நிலையில், 20 எம்.பி.க்கள் வாக்களிக்காமல் விட்டுள்ளனர். 762 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர். வெற்றி பெற குறைந்தபட்சம் 392 வாக்குகள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய […]
சமூக வலைதள தடை எதிர்ப்பு போராட்டம் அரசுக்கு எதிரான கலவரமாக மாறியதால், நேபாள பிரதமர் ராஜினாமா; விமான சேவைகள் பாதிப்பு. நேபாளத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியா – நேபாள இடையேயான பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகள் மீது நேபாள அரசு தடை விதித்தது. இதற்கு […]
22-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி குறைப்பு அமல்; விலை குறைப்பு விவரங்களை சுவரொட்டியில் வெளியிட உத்தரவு. ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களின் அடிப்படையில் பல்வேறு பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் அடங்கும். புதிய வரி விகிதங்கள் வருகிற செப்டம்பர் 22-ந்தேதி முதல் அமலுக்கு வருகின்றன.இதனால் கார் மற்றும் டூ வீலர் விலைகள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மக்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில், தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் விற்பனை மையங்களில் விலை […]
வெள்ளம், நிலச்சரிவு பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் பார்வையிட்ட பிரதமர்; உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம். உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்கள் கடந்த சில நாட்களாக கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் சேதமடைந்து, பொதுமக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த பிறகு இமாச்சலப் பிரதேசம் புறப்பட்டுச் சென்றார். அங்கு […]
12% மற்றும் 18% வரியிலிருந்த பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் இப்போது 5% ஜிஎஸ்டி அடுக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பொதுமக்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் வகையில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12% மற்றும் 28% வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்குகளே அமலுக்கு வரவுள்ளன. புதிய ஜிஎஸ்டி முறை செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதில், பல […]
ஜிஎஸ்டி வரி அடுக்குகள் எளிமைப்படுத்தப்பட்டு 28% வரி பல பொருட்களுக்கு 18% ஆக குறைக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கியமான சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12% மற்றும் 28% ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு, 5% மற்றும் 18% என்ற 2 அடுக்குகளையே கொண்ட புதிய வரிமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது. இதன் படி, வீட்டில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி போன்ற மின்சாதனங்களுக்கு […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.