2015 ஜனவரி 9க்கு முன் இந்தியா வந்த இலங்கைத் தமிழர்களுக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் வழங்க மத்திய அரசு முடிவு. போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். இவர்களில் பலர் தமிழ்நாட்டின் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நீண்டகாலமாக இவர்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, 2015 ஜனவரி 9க்குப் முன் உரிய ஆவணங்கள் இன்றி […]
மத்திய அரசு கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அமலுக்கு வந்தது. இதன் தாக்கத்தில் பிரபல கேமிங் நிறுவனங்கள் மாற்றத்தை அறிவித்துள்ளன. மத்திய அரசு சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் சட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் Dream11 மற்றும் மொபைல் பிரீமியர் லீக் (MPL) தங்களது தளங்களில் நிஜ பண கேம்களை உடனடியாக நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. Dream Sports உடைய Dream11 மற்றும் MPL, சட்டத்தை மதித்து செயல்படுவதாக உறுதி […]
அமெரிக்கா விதித்த வரி சுமைகளின் பின்னணியிலும், இந்தியா உக்ரைனுக்கான முக்கிய டீசல் ஏற்றுமதி நாடாக உருவெடுத்துள்ளது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் இந்தியாவுக்கு, அமெரிக்கா 50 சதவீத வரிகளை விதித்துள்ளது. இதனிடையே, உக்ரைனின் மிகப்பெரிய டீசல் சப்ளையராக இந்தியா மாறியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில், உக்ரைனின் மொத்த டீசல் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 15.5 சதவீதம் என அந்நாட்டின் எண்ணெய் சந்தை பகுப்பாய்வு நிறுவனம் NaftoRynok தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி முதல் ஜூலை […]
இந்தியாவின் கடற்படை வலிமையை உயர்த்தும் நோக்கில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நிறுவனங்களுடன் இணைந்து 2 நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தியாவின் ஆழ்கடல் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசு 2026க்குள் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 2 நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தங்களை இறுதி செய்யத் திட்டமிட்டுள்ளது. சீனாவின் கடற்படை வலிமை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா இந்த முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், பிரான்சின் “நேவல் குரூப்” நிறுவனத்துடன் இணைந்து ஸ்கார்பீன் […]
ஜப்பானில் இருநாட்டு உச்சிமாநாடு, சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் மற்றும் சீனாவுக்கு 4 நாள் பயணமாக ஆகஸ்ட் 28 அன்று டெல்லியில் இருந்து புறப்பட்டார். முதலில் ஜப்பான் சென்ற அவர், தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற 15வது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்றார். அப்போது ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். 2 நாள் பயணத்தை முடித்து, மோடி சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் […]
பிரதமர் மோடி ஜப்பான் பயணத்தில் – இரு நாடுகளின் கூட்டாண்மை, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில். 15வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோவில் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு ஜப்பான் சென்றடைந்தார். இது அவரது 8வது ஜப்பான் பயணமாகும். முக்கியமாக, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் அவர் முதன்முறையாக உச்சி மாநாட்டில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பில் இரு […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.