மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று தொடங்கும் கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான பதிவு முதற்கட்டமாக நடைபெறுகிறது. 2025ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இதில், இந்தியா முழுவதும் உள்ள 15% அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசு கீழ் செயல்படும் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வின் மூலம் நாடு முழுவதும் உள்ள 780 மருத்துவக் கல்லூரிகளில் […]
நாராயண்பூர் மாவட்டத்தில் காவல்துறையுடன் நடந்த மோதலில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்; இந்தியாவை மாவோயிஸ்ட்கள் இல்லாத நாடாக மாற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாத் பகுதியில் காவல்துறையுடன் இணைந்த பாதுகாப்புப்படை வீரர்கள் மேற்கொண்ட கூட்டு தேடுதல் வேட்டையின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 6 மாவோயிஸ்ட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். ரகசிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் ஏ.கே.47 துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 18 மாதங்களில் மட்டும் 421 மாவோயிஸ்ட்கள் […]
நாட்டின் அரசியல் நிலைமைகளை பரிசீலிக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூலை 19-ம் தேதி ஆன்லைனில் சந்திக்க உள்ளனர், அதற்குமுன் ஆம் ஆத்மி கட்சி வெளியேறியது பேசுபொருளாகியுள்ளது. மக்களவை உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு ஆன்லைனில் நடைபெறும் என அறிவித்துள்ளார். எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தற்போதைய அரசியல் சூழ்நிலை, பாராளுமன்றத்தில் ஒருங்கிணைந்த செயல்பாடு, […]
குஜராதில் நடந்த AI-171 விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்ததையடுத்து, பாதிக்கப்பட்டோருக்காக டாடா குழுமம் ₹500 கோடி நிதியுடன் நல அறக்கட்டளையை மும்பையில் தொடங்கியுள்ளது. அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி கொடூர விபத்தில் சிக்கியது. விமானத்தில் இருந்த 242 பயணிகளில் 241 பேர் உயிரிழந்தனர்; ஒருவரே உயிருடன் மீட்கப்பட்டார். விடுதி வளாகத்தில் மற்றும் அருகில் இருந்த மேலும் […]
NEET PG 2025 தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜூலை 31–ல் வெளியாகும் என்றும், தேர்வு மைய விவரங்கள் ஜூலை 21–ம் தேதிக்கு முன் மின்னஞ்சலில் அனுப்பப்படும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான NEET PG 2025 தேர்வு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, தேசிய மருத்துவத் தேர்வு வாரியம் (NBEMS) சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர்கள் தேர்வு எழுத வேண்டிய மையம் […]
NCERT வெளியிட்ட 8ஆம் வகுப்பு வரலாற்று புத்தகத்தில் முகலாயர்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்றுள்ளன. இது கல்வி வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. புதிய பாடப்புத்தகத்தில் பாபர், அக்பர், ஔரங்கசீப் ஆகியோர் வெகுஜன கொலைகாரர்களாகவும் கோயில்களை அழித்தவர்களாகவும் விவரிக்கப்படுகின்றனர். மதுரா, சோம்நாத், பனாரஸ் போன்ற இடங்களில் கோயில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை அழித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் உள்ள திருத்தமான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். எதிர்வினைகளை தணிக்க, 'கடந்த நிகழ்வுகளை கொண்டு இன்று யாரையும் […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.