பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில், செங்கல்பட்டில் 2000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம் அமையவுள்ளது. பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் ஒன்றை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. […]
செப்டம்பர் இறுதி முதல் அக்டோபர் இறுதி வரை பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் – முன்பதிவு நாளை தொடக்கம் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு பயணிகள் அதிகம் இருப்பதை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. இவற்றுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 26 வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும். மறுமார்க்கமாக, செப்டம்பர் 29 முதல் […]
செப். 24 முதல் நெல்லை–சென்னை வந்தே பாரத் ரெயிலில் 4 புதிய Chair Car பெட்டிகள் இணைப்பு. நெடுந்தூர பயணத்தை விரைவாக சென்றடைய இந்திய ரெயில்வே அறிமுகப்படுத்திய வந்தே பாரத் ரெயில்கள் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து, வழித்தடங்களும், வசதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. திருநெல்வேலி–சென்னை எக்மோர்–திருநெல்வேலி வந்தே பாரத் ரெயில் (20666/20665) தற்போது 16 பெட்டிகளுடன் இயங்கிவருகிறது. நீண்டகாலமாக எழுந்த கோரிக்கைக்கு இணங்க, வரும் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் இதில் 4 புதிய […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.