முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் ரூ.48 கோடியில் நிறைவு பெற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.113.51 கோடியில் புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் வைத்தார். மொத்தம் 8 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மயிலாடுதுறையில் சீரான போக்குவரத்திற்கு நீடூரில் ரூ.85 கோடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. குத்தாலம் வாய்க்கால் ரூ.7 கோடியில் புனரமைக்கப்படும். வெள்ளக்கோவில் பகுதிகள் ரூ.8 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன. பூம்புகார் துறைமுகத்தில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும். சீர்காழியில் ரூ.5 கோடியில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்படவுள்ளது. தரங்கம்பாடி–ஆடுதுறை சாலை […]
வேளச்சேரி ஏரி பாதுகாப்புக்கான வழக்கில், கிண்டி மைதானத்தில் ஏரி அமைக்க முடிவெடுக்க தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது. தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யாததால் பூங்கா அமைப்பிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி ஏரி மாசடைந்து பரப்பளவு குறைந்திருப்பதைக் குறித்து, சமூக ஆர்வலர் குமரதாசன் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 118 ஏக்கரில் ஏரி அமைத்தால், வெள்ள பாதிப்பில் இருந்து வேளச்சேரியை பாதுகாக்க முடியும் எனத் தெரிவித்தது. தற்போது […]
2025-26 நிதியாண்டிற்கான தேர்வுத் திட்டத்தின் கீழ் 645 அரசு பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IIக்கு ஆன்லைனில் விண்ணப்பம் துவங்கியுள்ளது, தேர்வு செப்டம்பர் 28 அன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூலை 15) முதல் ஆகஸ்ட் 13 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணம் UPI வாயிலாக செலுத்த இயலும். இத்தேர்வு […]
அடுத்த கல்வியாண்டுக்கான ஆசிரியர் மாறுதல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கலந்தாய்வில் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர், இதில் பலர் தங்கள் விருப்பத்திற்கேற்ப இடமாற்றம் பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் பொதுவான மாறுதல் கலந்தாய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளிலிருந்து மொத்தம் 11,163 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் 2,388 பேர் தங்கள் விருப்பமான பள்ளிகளில் பணியாற்ற இடமாற்ற ஆணையைப் பெற்றனர். பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்திக் […]
சென்னையில் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீரில் முறைகேடுகளை தடுக்க GPS கருவி மற்றும் ஸ்மார்ட் அட்டை முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மாநகரில் தினமும் வழங்கப்படும் குடிநீரின் ஒரு பகுதி, லாரிகள் மூலம் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு சென்று சேர்கிறது. ஆனால், இந்த விநியோகத்தில் முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்ததால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சில லாரி ஓட்டுநர்கள், வழியில் உள்ள தொட்டிகளில் முழு அளவு நீர் விடாமல் மீதமிருக்கும் நீரை வணிக நிறுவனங்களுக்கு விற்பதைப் போன்ற மோசடிகளில் […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பதவிக்கு எம்.எம். ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு முக்கியத் துறைகளின் தகவல்களை ஊடகங்கள் மூலம் மக்களிடம் விரைவாகவும் தெளிவாகவும் கொண்டு செல்லும் நோக்கில் நான்கு உயர் நிலை ஐஏஎஸ் அதிகாரிகளை செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளது. ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோருக்கு ஒவ்வொரு துறையையும் பொறுப்பாக ஒதுக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் தலைமைச் […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.