பணியிட மாற்றம் மற்றும் நியமனத்துக்கான முக்கிய நாள்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றக் கலந்தாய்வு ஜூலை 2 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வுக்காக 30,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் எனவும் அதில் […]
நடிகர் ஸ்ரீகாந்துக்கு பிறகு, கழுகு பட நடிகர் கிருஷ்ணா மீதும் போதைப்பொருள் வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியான கிருஷ்ணாவுக்கு, நுங்கம்பாக்கம் போலீசில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் செல்போனை முடைத்து தலைமறைவாகி, கேரளாவுக்கு தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசார் சம்மன் வழங்க சென்றபோது அவர் இல்லாததால், வீட்டில் இருந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அவரை தேட 5 […]
தங்கம் விலை தொடர்ந்து கீழ் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், விற்பனையில் இரண்டாவது நாளாகவும் குறைவான விலை பதிவாகியுள்ளது. ஆனால் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நிலைத்திருக்கிறது. வார தொடக்கமான நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.73,840-க்கு விற்பனையாகியுள்ளது. இன்று மேலும் கிராமுக்கு ரூ.75 குறைவால், ஒரு சவரன் ரூ.600 குறைந்து ரூ.73,240-க்கு விற்பனையாகிறது. இது தங்கம் விலையில் தொடர்ச்சியான இரண்டாவது குறைவு ஆகும். அதே நேரத்தில், கடந்த நான்கு நாட்களாக வெள்ளி […]
தமிழ்நாடு அரசு உயர்கல்விக்கு ஊக்கமாக ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் திருநங்கைகளுக்கும் இப்போது புதிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்களை தளர்த்தி அனைத்து வழிக்கல்வியையும் ஏற்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள் மூலமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயின்று, உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் ரூ.1000 உதவித்தொகை பெறுகின்றனர். இதுவரை இந்தத் தொகை, தமிழ் வழியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்திருந்தாலே மட்டுமே கிடைத்தது. தற்போது, திருநங்கைகள், […]
பயணச்சுமை அதிகரித்ததை முன்னிட்டு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. தெற்கு ரெயில்வே இந்த மாற்றத்தை அறிவித்து, பயணிகளுக்கு சிறந்த சேவையை உறுதி செய்துள்ளது. சென்னை ரெயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால், முன்பு 9 பெட்டிகள் கொண்டிருந்த ரெயில்கள் தற்போது 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. கடற்கரை-செங்கல்பட்டு, சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மற்றும் சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடங்களில் இந்த மாற்றம் நடைமுறையில் உள்ளது. பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை,பயணிகள் […]
ஜூலை 1 முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையிலேயே தட்கல் டிக்கெட் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தட்கல் ரெயில் முன்பதிவில் போலி கணக்குகள் காரணமாக பயணிகள் பெரும் சிக்கலை எதிர்கொண்டதைத் தொடர்ந்து, ரெயில்வே நிர்வாகம் 2.5 கோடி போலி IRCTC கணக்குகளை நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், ஜூலை 1 முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையிலேயே தட்கல் டிக்கெட் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் தங்களது IRCTC கணக்கில் ‘மை அக்கவுண்ட்’ பகுதியில் உள்ள […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.