செய்திகள் -

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: லக்ஷயா சென் வெளியேற்றம்

Sep 17, 2025
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார். சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியா சார்பில் லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்-சிராக் இணை போன்றோர் பங்கேற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷயா சென் தனது முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் தோமா பாப்போவ்-ஐ எதிர்கொண்டார். இப்போட்டியில், ஆதிக்கம் செலுத்திய தோமா பாப்போவ் 21-11, 21-10 என்ற நேர் செட்கணக்கில் […]

ஏமன் மீது இஸ்ரேல் தாக்குதல்

Sep 17, 2025
செங்கடலில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை இலக்காகக் கொண்டு ஏமனின் ஹொடைடா துறைமுக நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனில் உள்ள ஹொடைடா துறைமுக நகரம் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. செங்கடலில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்கு முன்னரே, ஹொடைடா துறைமுகத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் […]

வடகொரியாவில் ஆங்கிலச் சொற்களுக்கு தடை

Sep 16, 2025
மேற்கத்திய தாக்கத்தைத் தவிர்க்கும் வகையில், வடகொரியா அரசு Hamburger, Ice cream போன்ற ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. வடகொரியா, உலக நாடுகளிலிருந்து தனித்து நிற்கும் ஒரு சர்வாதிகார நாடு. இங்கு பல தசாப்தங்களாக ஒரே குடும்பத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது கிம் ஜாங் உன் நாட்டின் அதிபராக இருக்கிறார். அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையான கட்டுப்பாடுகளால் நிறைந்துள்ளது. இந்த நிலையில், வடகொரிய அரசு சில ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. […]
1 2

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu