செய்திகள் -

விம்பிள்டனில் அல்காரஸும் சபலென்காவும் அதிரடி வெற்றி – காலிறுதிக்கு முன்னேறினர்

Jul 07, 2025
ஆண்கள், பெண்கள் பிரிவிலும் முன்னணி வீரர்கள் தங்களின் பளிச்சென்ற ஆட்டத்தால் எதிரிகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கேறினர். ஆடவர் பிரிவில் உலக இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷிய வீரர் ரூப்லதேவை எதிர்த்து 6-7 (5), 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் ஒரு செட்டை இழந்தாலும், அதன்பின்னர் ஆட்டத்தை கட்டுப்படுத்தி அழுத்தமான முறையில் களம் பிடித்தார். பெண்கள் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை சபலென்கா, பெல்ஜியத்தின் […]

எலான் மஸ்க் தொடங்கிய ‘அமெரிக்கா’ கட்சி – டிரம்புடன் மோதல் தீவிரம்

Jul 07, 2025
ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான பயணமாக, எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் – டிரம்புடன் உறவு முறிந்தது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவராகவும், உலகின் செல்வமிக்கவர்களில் ஒருவராகவும் இருக்கும் எலான் மஸ்க், கடந்த ஆண்டின் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக இருந்தார். ஆனால், ‘BIG BEAUTIFUL’ மசோதாவை எதிர்த்ததையடுத்து அவருடன் கருத்து முரண்பாடுகளும், பதவியிலிருந்து விலகலும் ஏற்பட்டது. இந்நிலையில், ‘அமெரிக்கா’ என்ற புதிய கட்சியை தொடங்கிய மஸ்க், மக்கள் சுதந்திரத்திற்காகவே இந்த முயற்சி என தெரிவித்துள்ளார். […]

மக்கள்தொகை குறைவுக்கு பதிலடி – ரஷியாவில் கர்ப்பமான பள்ளி மாணவிக்கு ரூ.1 லட்சம் ஊதியம்

Jul 07, 2025
மக்கள்தொகை குறைவைக் கட்டுப்படுத்த, ரஷியாவில் இளம் வயதில் கர்ப்பமாகும் மாணவிகளுக்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது. மக்கள்தொகை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ரஷியா, 10 மாகாணங்களில் புதிய முயற்சியாக, கர்ப்பமான பள்ளி மாணவியருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு சமமான தொகையை வழங்க முடிவெடுத்துள்ளது. இதற்கு முன் நடைமுறையில் இருந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் திட்டம், இளைய பெண்களுக்கு பலனளிக்காததால், தற்போது அவர்கள் வரம்பிலும் இது கொண்டுவரப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.41 ஆக குறைந்துள்ளதுதான் […]

டெக்சாஸ் மாநிலத்தில் கடும் வெள்ளம் – 81 பேர் உயிரிழப்பு, பலர் மாயம்

Jul 07, 2025
மழைக்காலத்தில் பெய்ய வேண்டிய மழை சில மணி நேரத்தில் கொட்டியதால், டெக்சாஸ் மாநிலத்தில் கடும் வெள்ளப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மத்திய கெர் கவுண்டியில் ஏற்பட்ட கனமழையால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர் ஊர்களுக்குள் புகுந்து வீடுகள், வாகனங்களை அடித்து சென்றது. பல வீடுகள் முழுமையாக மூழ்க, பலர் மேல்மாடியில் தஞ்சம் அடைய நேர்ந்தது. தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது, இதில் 28 குழந்தைகளும் உள்ளனர். மேலும் […]
1 5 6 7

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu