ஆகஸ்ட் மாதத்திற்கு வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்களை அடுத்து, எண்ணெய் நிறுவனங்களுக்கு சிலிண்டர் விலையை தீர்மானிக்கும் சுதந்திரம் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 34 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,789 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதன் விலை ரூ.1,823.50 என […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பின் படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்பட உள்ளது, மேலும் 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை அதிகளவில் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா ஆகஸ்ட் முதல் புதிய வரி விதிப்பை அமல்படுத்த உள்ளது. இதற்கிடையில் ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி, 6 இந்திய பெட்ரோகெமிக்கல் நிறுவனங்கள் மற்றும் […]
சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் காரணமாக இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை பெரிதளவில் உயர்ந்துள்ளதாக எகனாமிக் டைம்ஸ் அறிக்கை வெளிவந்துள்ளது. இது நாட்டின் பொருளாதார சீர்நிலைக்கு சவாலாக அமைந்துள்ளது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, ஜப்பான், தென் கொரியா, ஆசியான் நாடுகள் உள்ளிட்ட பலருடன் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இந்தியா தற்போது தனது ஏழு முக்கிய வர்த்தக கூட்டாளர்களில் ஐந்துடன் இழப்பை சந்திக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் மொத்த வர்த்தகப் பற்றாக்குறையில் இதன் பங்கு 37% ஆகும் […]
சர்வதேச சந்தை மாற்றங்களை எதிரொலியாக இந்தியாவில் தங்க விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரத்தில் விலை சற்று உயர்ந்துள்ளது. முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.9,060-க்கு விற்பனையான நிலையில், நேற்றை நிலையில் இது ரூ.9,010 ஆகக் குறைந்தது. அதேபோல், ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.72,080-க்கு விற்பனையாயிற்று. ஆனால், இன்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் ரூ.9,060-க்கும், ஒரு சவரன் ரூ.72,480-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் எந்த […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.