சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் லக்ஷயா சென் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார். சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியா சார்பில் லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்-சிராக் இணை போன்றோர் பங்கேற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷயா சென் தனது முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் தோமா பாப்போவ்-ஐ எதிர்கொண்டார். இப்போட்டியில், ஆதிக்கம் செலுத்திய தோமா பாப்போவ் 21-11, 21-10 என்ற நேர் செட்கணக்கில் […]
பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி அதிரடி வெற்றி. அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில், உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா, அடுத்த கட்டத்தில் அதிரடியாக மீண்டு விளையாடினார். தனது வலுவான சர்வ் மற்றும் தாக்குதல்மிகு ஆட்டத்தால் இரண்டாம் செட்டை 6-3 என வென்றார். தொடர்ந்து, […]
இந்திய இளைஞர் அணி, கசகஸ்தானில் நடைபெற்ற 16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று பல பதக்கங்களை பெற்றது. இந்திய இளைஞர் அணி, கசகஸ்தானில் நடைபெற்ற 16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று பல பதக்கங்களை பெற்றது. பேட்ராப் யூத் மகளிர் தனிநபர் பிரிவில் தனிஷ்கா தங்கப் பதக்கம், நிலா ராஜா பாலு வெள்ளிப் பதக்கம், அந்த்ரா ராஜ்சேகர் வெண்கலப் பதக்கம் வென்றனர். அதேபோல் பேட்ராப் யூத் மகளிர் அணி தங்கப் பதக்கம் […]
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் முன்னாள் உலக சாம்பியன் பிவி சிந்து பெண்கள் ஒற்றையர் சுற்றில் கலோயானா நல்பந்தோவாவை எதிர்கொண்டார். இந்திய வீராங்கனை 23-21, 21-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டிகளில் தடுமாறி வந்த […]
புதிய சட்டத்தால் அதிர்ச்சி – இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ரத்து மத்திய அரசு கொண்டு வந்த புதிய கேமிங் மசோதா, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்று சட்டமாகியது. இதன் மூலம் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. இதையடுத்து Dream11, MPL போன்ற தளங்கள் தங்கள் நிஜ பண அடிப்படையிலான விளையாட்டுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ட்ரீம்11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகியது. இதுகுறித்து BCCI செயலாளர் […]
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.