ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி குடிநீர் திட்ட பணி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை மற்றும் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். வேலூர் மாநகராட்சி சாலைகளுக்காக ரூ.280 கோடி வழங்க உள்ளோம். மேலும் பல்வேறு திட்டங்களில் மொத்தம் ரூ.314 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் 91 சதவீதம் முடிந்துள்ளது. காவிரி குடிநீர் வழங்கும் பொருட்டு வேலூர் (ஒரு பகுதி), திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் (ஒரு பகுதி) ஆகிய இடங்களில் ரூ.14 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். கடன் வரப்பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.