சமூக வலைதளங்களில் கணக்கு துவங்கியது சி.பி.ஐ

October 3, 2022

சமூக வலைதளங்களான 'டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' தளங்களில் சி.பி.ஐ., அமைப்பு கணக்கு துவக்கி உள்ளது. மத்திய - மாநில அரசு துறைகள், அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மத்திய விசாரணை அமைப்புகள் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர். அமலாக்கத் துறை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளும் துறை சார்ந்த அறிக்கைகள், அறிவிப்புகளை சமூக வலைதள கணக்கு வாயிலாக வெளியிட்டு வருகின்றன. ஆனால், இதில் சி.பி.ஐ., இணையாமல் தவிர்த்து வந்தது. துறை சார்ந்த அறிக்கைகளை பழைய […]

சமூக வலைதளங்களான 'டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' தளங்களில் சி.பி.ஐ., அமைப்பு கணக்கு துவக்கி உள்ளது.

மத்திய - மாநில அரசு துறைகள், அமைச்சர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மத்திய விசாரணை அமைப்புகள் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்துள்ளனர். அமலாக்கத் துறை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனம் உள்ளிட்ட அமைப்புகளும் துறை சார்ந்த அறிக்கைகள், அறிவிப்புகளை சமூக வலைதள கணக்கு வாயிலாக வெளியிட்டு வருகின்றன.

ஆனால், இதில் சி.பி.ஐ., இணையாமல் தவிர்த்து வந்தது. துறை சார்ந்த அறிக்கைகளை பழைய முறைப்படி நேரடியாகவும், 'இ -மெயில்' வாயிலாகவுமே வெளியிட்டு வந்தது. இந்நிலையில், வரும் 18 - 21 வரை 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் 90வது பொது சபை கூட்டம் புதுடெல்லியில் நடக்கிறது. இன்டர்போலில் நம் நாடு சார்பில் அங்கம் வகிக்கும் சி.பி.ஐ., இந்த பொதுக்கூட்டத்தை தலைமை ஏற்று நடத்துகிறது. இதில், 195 நாடுகள் பங்கேற்கின்றன. இதையடுத்து, டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் சி.பி.ஐ., தன் அதிகாரப்பூர்வ கணக்குகளை துவக்கி உள்ளது. CBI_CIO என்ற பெயரில் அவை துவக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu