நீட் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சிபிஐ காவல்

நீட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேருக்கு சிபிஐ காவல் விடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு மோசடி வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த முறைகேட்டில் பல்வேறு மாநிலங்களில் இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. மீதமுள்ளவர்களை மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை இதில் 22 பேர் ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்திருந்தனர். […]

நீட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 13 பேருக்கு சிபிஐ காவல் விடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மோசடி வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த முறைகேட்டில் பல்வேறு மாநிலங்களில் இதுவரை 57 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. மீதமுள்ளவர்களை மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை இதில் 22 பேர் ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 13 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க தற்போது நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அவர்கள் இன்றே சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று மத்திய சிறை நிர்வாகத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu