டெல்லி விஞ்ஞான் பவனில் சிபிஐ வைர விழா கொண்டாட்டம்

டெல்லி விஞ்ஞான் பவனில் சிபிஐ வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கடந்த 1963-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி, சிபிஐ தொடங்கப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டம் இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடக்கிறது. வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சிபிஐயில் சிறப்பாக பணிபுரிந்ததற்கு ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் மற்றும் சிறந்த விசாரணை அதிகாரிகளுக்கான தங்க பதக்கங்களை பிரதமர் மோடி அளிக்கிறார். மேலும் ஷில்லாங் (மேகாலயா) மற்றும் […]

டெல்லி விஞ்ஞான் பவனில் சிபிஐ வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

கடந்த 1963-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி, சிபிஐ தொடங்கப்பட்டது. அதன் வைர விழா கொண்டாட்டம் இன்று டெல்லி விஞ்ஞான் பவனில் நடக்கிறது. வைர விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சிபிஐயில் சிறப்பாக பணிபுரிந்ததற்கு ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் மற்றும் சிறந்த விசாரணை அதிகாரிகளுக்கான தங்க பதக்கங்களை பிரதமர் மோடி அளிக்கிறார்.

மேலும் ஷில்லாங் (மேகாலயா) மற்றும் புனே, நாக்பூர் (மராட்டியம்) ஆகிய நகரங்களில் புதிதாக கட்டப்பட்ட சி.பி.ஐ. அலுவலகங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சிபிஐயின் வைரவிழாவை குறிக்கும் அஞ்சல் தலை, நினைவு நாணயம் ஆகியவற்றை வெளியிடுகிறார். சிபிஐயின் 'ட்விட்டர்' கணக்கையும் தொடங்கி வைக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu