சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

December 31, 2022

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 வரையிலும், 12ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 வரையிலும் தேர்வுகள் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டுகளின் அனுபவங்களின் அடிப்படையில், இரண்டு […]

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள நிலையில் அதற்கான அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 21 வரையிலும், 12ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 வரையிலும் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டுகளின் அனுபவங்களின் அடிப்படையில், இரண்டு வகுப்புகளுக்கும் தேர்வு நடக்கும் போது வேறு சில தேர்வுகள் அல்லது ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புகளுக்கான தேர்வுகள் குறுக்கீடு செய்து வந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். அதன் பேரில், இந்த ஆண்டுக்கான தேர்வின் போது எந்த குறுக்கீடுகளும் இல்லாமல் தேர்வு அட்டவணையை தயார் செய்துள்ளதாக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu