ஜனவரி 2 முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தொடக்கம்

December 28, 2022

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2ம் தேதி தொடங்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், இன்னும் தேர்வு அட்டவணை வெளியிடப்படாமல் இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக பொதுத் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் ஒரே கட்டமாக நடத்தப்படலாம் என்று தெரிகிறது. […]

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2ம் தேதி தொடங்கும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கின்ற மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், இன்னும் தேர்வு அட்டவணை வெளியிடப்படாமல் இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக பொதுத் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் ஒரே கட்டமாக நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

செய்முறைத் தேர்வுகளை நடத்துவது குறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி 2023 ஜனவரி 2ம் தேதி முதல் 14ம் தேதிக்குள் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதே தேதிகளில் மாணவர்களுக்கான செயல்திட்டங்கள், அகமதிப்பீடுகள், ஆகியவற்றுக்கான மதிப்பெண்களையும் பள்ளிகள் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu