சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று காலை தொடங்குகிறது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 1:30 மணிக்கு நிறைவடைய உள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று முதல் ஏப்ரல் 2ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு இன்று முதல் மார்ச் 13ஆம் தேதியும் நிறைவடைகிறது. தேர்வில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














