சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. நாடு முழுவதும் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு நடந்தது. இந்த தேர்வினை 16.9 லட்சம் மாணவர்கள் 6,759 மையங்களில் எழுதினர். இந்நிலையில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5.38% குறைந்துள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91%, பெங்களூருவில் 98.64%, சென்னை […]

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

நாடு முழுவதும் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு நடந்தது. இந்த தேர்வினை 16.9 லட்சம் மாணவர்கள் 6,759 மையங்களில் எழுதினர். இந்நிலையில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 87.33% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 5.38% குறைந்துள்ளது. அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.91%, பெங்களூருவில் 98.64%, சென்னை மண்டலத்தில் 97.40% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களிடம் தேவையற்ற போட்டியையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க முதலிடம், 2ம் இடம், 3ம் இடம் விவரத்தை வெளியிடவில்லை. சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 6.01% அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu