தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் ரூ.38 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது என உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 1,578 காவல் நிலையங்களில் புதிய சிசிடிவி கேமராக்களை பொருத்த, பழைய கேமராக்களை புதுப்பிக்க ரூ.38.35 கோடி தமிழக அரசு ஒதிக்கீடு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், 1578 காவல் நிலையங்களில் 12 முதல் 18 மாதங்கள் வரை காட்சிகளை சேமிக்கக் கூடிய கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்க உள்ளன எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிதி மூலம் சிசிடிவி கேமரா பதிவுகளை அதிகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.