இஸ்ரேல் போர் நிறுத்த தீர்மானம் வீட்டோ மூலம் அமெரிக்கா ரத்து

February 19, 2024

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அல்ஜீரியா வரைவு தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அல்ஜீரியா வரைவு தீர்மானம் ஒன்றை கொண்டு வர உள்ளது. இந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் தெற்கு காசாவில் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்த உடன்படிக்கை […]

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அல்ஜீரியா வரைவு தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அல்ஜீரியா வரைவு தீர்மானம் ஒன்றை கொண்டு வர உள்ளது. இந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்யப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் தெற்கு காசாவில் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட அமெரிக்கா விருப்பம் தெரிவித்திருந்தது எனினும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க நேதன்யாகு விரும்பவில்லை. ஹமாஸை முற்றிலும் ஒழிக்கவும், பாலஸ்தீனர்கள் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு காசா பகுதியை தாக்கவும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு முடிவு எடுத்துள்ளார்.

இந்நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்ட காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் ஒன்றை ஐநா பாதுகாப்பு கவுன்சில் அல்ஜீரியா கொண்டு வர உள்ளது. இந்த தீர்மானம் குறித்து ஐநா சபைக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன் பீல்ட் கூறுகையில், இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வரும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இந்த வரைவு தீர்மானம் எதிரானது. எனவே இது ஏற்றுக்கொள்ளப்படாது. போர் நிறுத்தம் என்பது ஒரு தரப்பை வெற்றியடைய செய்கிறது. எனவே இந்த போர் நிறுத்த தீர்மானத்தை வீட்டோ மூலம் ரத்து செய்ய உள்ளோம் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu